உலக செஸ் சாம்பியன்ஷிப் – 2வது சுற்றும் டிரா.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ரூ.23.37 கோடி பரிசுத்தொகை கொண்ட இத்தொடரில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவுடன் மோதுகிறார்.
14 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், நேற்று 2வது சுற்று நடைபெற்றது. இதில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய குகேஷ், லண்டன் சிஸ்டம் முறையைப் பயன்படுத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 20வது நகர்த்தலிலேயே டிராவில் முடிந்தது. இதனால் இரண்டு சுற்றுகளின் முடிவில் குகேஷ், சிந்தாரோவ் இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர்.
0
Leave a Reply