டிரைலரை வைத்து முடிவு செய்யாதீர்கள்: சல்மான் கான்.
அபூர்வ் லக்கியா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள இந்திப் படம்'மாத்ருபூமி'. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பது, அவர்களுக்கு சல்மான் கான் எச்சரிக்கை விடுப்பது, தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் உள்ளிட்ட அதிரடியான காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
வெளியான 18 மணி நேரத்திலேயே இந்த டிரைலர் 1.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சல்மான் கான் கூறுகையில்,"டிரைலரை மட்டும் பார்த்து எதையும் மதிப்பிட வேண்டாம். என்னையும், எனது படத்தையும் விமர்சிப்பதன் மூலம் மற்றவர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். படம் வெளியான பிறகு அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் கிடைக்கும்" என்றார்.
0
Leave a Reply