பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2027- ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2027-ஆம் ஆண்டு மார்ச்-8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2027-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள், தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒளவையார் விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான (https://awards.tn.gov.in)-ல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.18.01.2027 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
மேலும், கையேட்டில் (Booklet) பொருளடக்கம் மற்றும் பக்க எண் (index), விண்ணப்பதாரர் சுய விவர தரவு (Bio data), சுயசரிதை (ம) passport size photos – 2, ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin points), தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (verdana), தேசிய மற்றும் உலகளாவிய விருது பெற்றிருப்பின் விருதின் பெயர் / யாரிடமிருந்து பெறப்பட்டது / பெற்ற வருடம் / விருது பெற்றதிற்கான காரணம் போன்ற விவரங்கள், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை (இருந்தால்), சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றிவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான நன்னடத்தை சான்றிதழ், இணைப்பு படிவம் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (verdana) முழுமையாக பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், 312, மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர், 04562-252 701 என்ற முகவரிக்கு நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும், கையேடு (Booklet) தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் ஆகியவற்றை இணைத்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply