25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


குளிரைச் சமாளிக்க….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிரைச் சமாளிக்க….

தமிழ்நாட்டில் குளிர்தாலம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும். மழை சற்றுக் குறைவாகவும் குளிர் அதிகமாகவும் உள்ள பருவம் இது. இருப்பினும் அனைவரும் விரும்பும் பருவம் இக்காலம் தான். சுட்டு எரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து இளைப்பார, இது ஒரு பொன்னான பருவம். இம்மாதங்களில் சிறுசிறு தொல்லைகளும் நோய்களும் வர வாய்ப்புண்டு.

முடிந்தளவிற்கு வீட்டிலேயே உணவை உண்ண வேண்டும்.

கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரையே வீட்டிலேயும், வெளியிலேயும் குடிக்க வேண்டும்.

இருமல்,சளி வர வாய்ப்பு அதிகமுள்ளதால், அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.

அவசியம் ஃபுளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல், இன்ஹேலரை உபயோகப்படுத்த வேண்டும்.

குளிரைக்குறைக்கும் கம்பளி ஆடைகளையே முடிந்தளவிற்கு உபயோகிக்க வேண்டும்.

தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம்.

பக்கவாதம், உதறுவாதம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு, இயன்முறைச் சிகிச்சை அவசியம்.

யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

மலச்சிக்கல் வர  வாய்ப்பு அதிகம். ஆகையால் அதற்கு நிவாரணம் பெற நிறைய பழங்கள். காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், பீட்ரூட் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாகம் அதிகம் இருக்காது. ஆகையால் சுமார் 2 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

முடிந்தளவிற்கு காபி, டீயைக் குறைத்துக்கொண்டு சூடான சூப்பை அருந்தலாம்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் தோலுக்கு நல்லது. தோல் வறட்சியை நீக்கும்.

கொய்யா, மாதுளம் பழம் குளிர்காலத்திற்கு ஏற்ற பழம்.

பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்காலத்தில் பசி சற்று அதிகம் இருக்கும். அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு, உணவில் கவனம் தேவை.

மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால், குளிரை எளிதாகச் சமாளித்துவிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *