25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், (27.09.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழானை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.   இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று நடத்தப்பட்டது.


 இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News