நுரையீரல் தொற்றிலிருந்து பாதுகாக்க…
நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவைகளில் மிக முக்கியமானது, சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவைகளாகும்.
சர்க்கரை நோய், இதயநோய், உடல்பருமன், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு குறைதல் இவைகளாலும், நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும்.அடிக்கடி இருமல் வந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது. நாள்பட்ட சளித்தொல்லையாக இருந்தாலும், அதையும் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.மூச்சு திணறலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டு, இருமலுடன் ரத்தம் வந்துவிடும். எனவே, 15 நாட்களுக்குமேல், இருமல் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும்.
எலும்புகளிலும், தோல் பட்டைகளிலும் அதிக வலி ஏற்படுவது, திடீரென குரலில் மாற்றம் தென்படுவது இந்த அறிகுறியிருந்தால், காசநோய், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என்றிருக்காமல், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.
நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படாதவாறு, கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் அவசியம்., நுரையீரலுக்கு பலம்தரக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். சமையலில், நிறைய இஞ்சி - பூண்டு உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனால், தொற்றுகள், நச்சுக்கள் அழிக்கப்படுவதுடன, நுரையீரல் புற்றுநோயும் எளிதில் அண்டாது. சுவாசப்பாதையும் சீராகும்.
ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவற்றை நிறைய சேர்த்து கொள்ளலாம். அதேபோல, கீரை, முட்டைக்கோஸ், டர்னிப் கீரைகள், ப்ரோக்கோலி, இயற்கையான வைட்டமின் K ஆதாரங்களாகும்.
பீட்டாகரோட்டின், வைட்டமின் A நிறைந்த கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும்.மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளிலும், ஒமேகா 3 சத்து உள்ளதால், தினமும் இவைகளில் தினம் ஒன்றையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நுரையீரல் வலியிருந்தால், இஞ்சியில் டீ தயாரித்து குடிக்கலாம்.இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளதால், வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் இது தடுக்கும். இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்து, அதற்குபிறகு, டீ தயாரித்து குடிக்க வேண்டும்.
துளசியும் நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதிலிருக்கும் காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பண்பை பெற்றுள்ளதால், துளசியை பச்சையாகவோ அல்லது காயவைத்தோ, டீ தயாரித்தோ தினமும் குடிக்கலாம்.
0
Leave a Reply