25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


அஜித் கைவிட்ட நிலையில் விக்னேஷ் சிவன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜித் கைவிட்ட நிலையில் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில்,அஜித் அந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் விக்னேஷ் சிவனின் ஆட்டிட்யூட் சரி இல்லை, கதை பிடிக்கவில்லை என பல காரணங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்று தற்போது வரை வெளியாகவில்லை .இந்த படம் பாதியிலேயே டிராப்பானது. 

 அடுத்து விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பெரிய நடிகரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருமா? விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் கடினம்.  

 காமெடி படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு. வருகிறாராம் .

அஜித்தின்" ஏகே62" படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும், நயன்தாராவை வைத்து படம் இயக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், விக்னேஷ் சிவன் உள்ளார். மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News