தென் ஆப்ரிக்க அணி கிரிக்கெட் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம் பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.
பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி,3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் ஆனது.
கடைசியாக 1998ல் வங்கதேசத்தில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்றிருந்தது.உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா வுக்கு ரூ. 18 கோடி பரிசாக கிடைத்தது.
0
Leave a Reply