இந்தியாவின் ஜெய்ஸ்மின்லம் போரியா குத்துச்சண்டை பைனலில் …
உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் கிரேட்டர் நொய்டா வில் (உ.பி.,),. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம் போரியா 24, கஜகஸ்தானின் உல்சான் சர் சென்பெக் மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.இந்தியாவின் நிகாத் ஜரீன் (51 கிலோ) மற்றொரு அரையிறுதியில் 5-0 என கனிவா குல்சேவரை வென்றனர்.
இந்தியாவின் ஜது மணிசிங்ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என, ஆஸ்திரேலியாவின் ஓமர் இசாசை வீழ்த்தினார். இந்தியாவின் பவான் பாத்வால்மற்றொரு அரையிறுதியில் (55 கிலோ)5-0 என இங்கிலாந்தின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை தோற்கடித்தார். அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) வெற்றி பெற்றனர்.
அரையிறுதியில் தோல்வியடைந்த இந் தியாவின் ஜகளோ (55 கிலோ), நீரஜ் போகத் (65 கிலோ), சுமித் (75 கிலோ) அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றனர்.
0
Leave a Reply