25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


எலும்புகள் வலுவாக இருக்க…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலும்புகள் வலுவாக இருக்க…

ஆரோக்கியமான உடலுக்கு, எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது முக்கியம். வயது ஏற ஏற, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய ஆரம்பிக்கும். குறிப்பாக35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு அதிகரிக்க தொடங்குகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் எலும்புகள் வளர வளர, எலும்பு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன், வேறு சில ஊட்டசத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எலும்புகளும் பலவீனமடையத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக பராமரிக்க  உண்ண  வேண்டிய உணவுகள். 

எலும்புகளை வலுப்படுத்த, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இருந்து உடலுக்கு நல்ல அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கிறது..

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் காணப்படுகின்றன. இதற்கு ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, ஸ்ட்ராபெரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தைகளின் உணவில் முட்டையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. முட்டை மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கும்.

 எலும்புகளை வலுப்படுத்த, முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும்திராட்சை போன்றஉலர் பழங்களைச்சேர்க்கவும்.

உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பீன்ஸ் அதிகம் சேர்க்க வேண்டும். இவை வைட்டமின் ஏ, சி மற்றும் கே மற்றும் ஃபோலிக் அமிலத்தை வழங்குகின்றன.

உடலில் கால்சியம் குறைபாட்டை போக்க தினமும் 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட எலும்புகள் வலுவடையும்.

எலும்புஆரோக்கியத்திற்கு காளான்களை,சாப்பிடுபவர்களுக்கு கால்சியம், வைட்டமின்டி, வைட்டமின்பி12 கிடைக்கும்.

எலும்புகளை வலுப்படுத்த, உங்கள் உணவில் பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும், கொய்யாவை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், கால்சியம் குறைந்து எலும்புகள் பலவீனமடையும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News