25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது ஆண்டு நிகழ்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது ஆண்டு நிகழ்வு

தமிழ் சினிமாவில் சுமார்40 ஆண்டுகளாக ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் சிவக்குமார். இவருக்கு பின்பு அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கோலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது ஆண்டு நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழகத்தில் இருக்கும் 12ஆம்வகுப்புஏழைமாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அப்போது கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், குடும்ப சூழ்நிலையினால் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என அவருடைய சிறு வயது கதையை சொல்லி கண் கலங்கினார்.

சிவக்குமார் தன்னுடைய தந்தை கருப்பா சிவப்பா என்று கூட பார்த்ததில்லை. அவர்10 மாத குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்து விட்டார். அதன் பின்பு இவருக்கு4 வயதில் இருக்கும்போதே குடும்ப பாரத்தை சுமக்க இருந்த அண்ணனும்14 வயதில் பிளேக் நோயில் இறந்து விட்டார். அவர்கள் ஊரில் மழை பெய்யாததால் சோளம், ராகி என எந்த விளைச்சலுமே இல்லை.

ஆனால் எருக்கன் செடியும், அரளி செடியும் வளர்ந்து நின்றது. புருஷனும் போய்விட்டார், குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகனும் இறந்துவிட்டார் என்ற விரத்தியில், அன்று என்னுடைய தாய் அரளிக்கொட்டையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே கதை முடிந்திருக்கும். ஆனால் அந்த அப்பாவி மக அதை செய்யாமல் விட்டதால்தான் இன்று இங்கே நிற்கிறேன் என்று மேடையில் கண்கலங்கி அழுதார்.

இதை சிவக்குமார் அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஏழ்மை கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது,என்பதைஉணர்த்துவதற்காகவே பகிர்ந்து கொண்டார். ஆனால் அதே மேடையில் இருந்த சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தந்தை பட்ட கஷ்டத்தையும், அவர் கண்கலங்கி நிற்பதையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் அவர்களும் கண் கலங்கியபடி தலைகுனிந்து அந்த மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News