இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் (02.07.2025) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை வருகின்ற 07.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.அதனடிப்படையில் இன்று அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் முன்னேற்பாடு பணிகள், குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply