மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கியக் கழகம் மற்றும் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தினவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கியக் கழகம் மற்றும் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தினவிழா நிகழ்ச்சியில் (21.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இன்று உலக தாய்மொழி தினம். நாம் எப்படி அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடுகிறோம். அது போல ஒவ்வொருவருக்கும் அவரது தாய் உணர்வு ரீதியாக, அன்பு ரீதியாக எவ்வளவு மிகுந்த நெருக்கத்திற்கு ஆட்டபட்டவரோ, அதே போன்று தாய்மொழியும் அவரவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.
மிகவும் புகழ் மிக்க ஒரு பொருளாதார கோட்பாட்டில், இந்த உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் அல்ல என குறிப்பிடுகிறது. மேலும், மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும், ஏன் ஒவ்வொருவரும் தாய்மொழியை கொண்டாடுகிறார்கள் என்ற அடிப்படை கேள்விக்கு விடையை கண்டுபிடித்தால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் தாய்மொழியை கொண்டாடுகிறோம்.பாரதிதாசன் அவர்கள் தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலில்; உயிரும் தமிழும் ஒன்றுதான். தமிழ்மொழி என்பது 2000 ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட இலக்கண இலக்கிய வளங்களை கொண்டது. இன்றளவும் உலகெங்கும் அதிகளவு கொண்டாடப்படக்கூடிய மொழியாக தொன்றுதொட்டு தொடர்ச்சியான இலக்கண இலக்கிய வளங்களை கொண்ட மொழியாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் பத்து கோடிக்கும் அதிகமானவர்கள் பேசக்கூடிய ஒரு மொழியாக இன்றளவும் இருக்கிறது. தமிழ் மொழியில்; 2000 ஆண்டுகளாகவே எந்த ஒரு மாற்றமும் இல்லை. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கக்கூடிய சங்க இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் மொழிகளுக்குள் ஒரு பெரிய வேறுபாடு இல்லை.
நமது மொழி ஒரு இறுகியத் தன்மை உடையதா என்று பார்த்தால் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு இந்த மொழி தனது தகவமைப்புகளை பெறவில்லையா என்று பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தொழில் நுட்பங்கள் வேறு. தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் வேறு. அதற்கு ஏற்ப மொழித்தன்னை தகவமைத்து கொண்டிருக்கிறதா என்றால், இதுக்கு இலக்கணமே வழிவகைத்துக் கொண்டிருக்கிறது.ஆங்கிலம் என்பது உலகின் உடைய இணைப்பு மொழி, அறிவு மொழி, அறிவியல் மொழி. நாம் புதுபுது சிந்தனைகளை பெறுவதற்கும்,அறிவியல் தொழில்நுட்பம் பெறுவதற்கும், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும், ஏன் பாடத்திட்டத்தை பயில்வதற்கும் ஆங்கிலம் தான் வருகிறது.
நமது மொழியை படிப்பதன் மூலமாக நிறைய புரிதல் மற்றும் தனிப்பட்ட நலன்கள் இருக்கிறது. நமது மொழி என்பது நமக்கு பல்வேறு இலக்கிய செல்வங்களை கொண்டு தருகிறது. அந்த இலக்கிய செல்வங்கள் என்பது நாம் எப்போது எல்லாம் சோகமாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் நமக்கு ஆறுதல் தெரிகிறது. நீங்கள் பறப்பதற்கு வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் அப்போது சிறகுகளை தருகிறது. நம் வாழ்க்கையினுடைய போக்குகளில் துன்பங்கள் எதிர்கொள்கின்ற பொழுது சற்றே அருகில் வந்து ஆறுதல் படுத்துகிறது. இன்பக் களிப்புகளை வெற்றிகளை கொண்டாடுவதற்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதைப் போன்று ஆகச் சிறந்த வடிவம் மொழியாகும்.
தமிழ்மொழி அற்றுப்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், தாங்கிப் பிடிப்பதற்கும் உதவுகிறது. இன்றைய சூழலில் முறையான நமக்கான கல்வி, வேலைவாய்ப்பு என எப்படி இருந்தாலும் ஆணிவேராக இருக்க வேண்டியது நம்முடைய தமிழ் மொழி. இந்த தமிழ் மொழி நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இலக்கிய செல்வங்களை பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது அதனை தேடினால் கண்டறிய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply