ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு .
முடங்கியாறு ரோடு ராஜபாளையம் நகரின் மையத்திலிருந்து மேற்கு செல்லும் பிரதான சாலை ஆக்கிரமிப்பாளர்களால். போட்டி போட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கண்டுகொள்ளாமல் உள்ள ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளால், சாமானிய மக்கள் தினமும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
ரோட்டின் எல்லை தெரியாத அளவு ,ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கி எம். ஜி.ஆர்சிலை வரை அகலமான முடங்கியார் ரோடு பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களால் மறைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சி புதிய குடியிருப்புகளால் ஒவ்வொரு நாளும் அதிக வாகன போக்குவரத்தை எதிர் கொண்டு வருகின்றன. முதியோர், பாதசாரிகள் நின்று ஒதுங்கி செல்ல வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் சாமானியர்கள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை நிறுத்தி வைத்திருப்பது போன்ற அவலங்கள் தினமும் நிகழ்ந்து வருகிறது.
0
Leave a Reply