25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கோல்டன் பிளாண்ட்  பொன்னாங்கண்ணி கீரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோல்டன் பிளாண்ட் பொன்னாங்கண்ணி கீரை

பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,20 முதல்30 நிமிடங்கள் உறை வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும், தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும். பொன்னாங்கண்ணி சாறு,கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால் எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும், இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து தலை மூழ்கி வர கண் வியாதிகளும், பித்த நோய்களம் குணமாகும் என கூறியுள்ளனர். சித்தர்கள், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும், நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கும் வரும்.

வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *