25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தொழிலாளர்  தினம்  அன்று அனைத்து  ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழிலாளர் தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2022 முதல் 31.03.2023 வரை)
 கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
 சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தில்.
 கிராம வளர்ச்சித் திட்டம்(VPDP).
 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு  செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம்  குறித்து விவாதித்தல்.
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு  செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் மற்றும் தொழிலாளர் மதிப்பீடு (Labour Budget) குறித்து விவாதித்தல்.
 பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் - குறித்து விவாதித்தல்.
 அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல்.
 பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல்.
 தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல்.
 கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல்.
 எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதிமொழி எடுத்தல்.  
 ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல்.
 வறுமை குறைப்பு திட்டம்(VPRP)
 இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.
எனவே, 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News