25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டத்திலுள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு  ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டத்திலுள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை  www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். 

            மேலும், விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562 - 244 707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும், மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News