25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில்  (24.02.2025) விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் .சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என மொத்தம் 7 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.15.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 இலட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வதுவார்பட்டியை சேர்ந்த திருமதி ராமலட்சுமி  என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கோணப்பசாமி என்பவருக்கும், சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த திரு.சைமன் டேனியல் என்பவரின் வாரிசுதாரரான  (மனைவி) திருமதி சங்கரேஸ்வரி என்பவருக்கும், சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி வீரலெட்சுமி என்பவரின் வாரிசுதாரரான  (கணவர்) திரு.ரவிச்சந்;திரன் என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,

வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி கஸ்தூரி  என்பவருக்கு ரூ.2 இலட்சம் மற்றும் விருதுநகர்  கோட்டையூரை சேர்ந்த  திருமதி முருகேஸ்வரி, விருதுநகர் வட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த திரு.மாணிக்கம் மற்றும் அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி மகாலட்சுமி  ஆகியோர்களுக்கு தலா ரூ.50,000- வீதம் என மொத்தம் காயமடைந்த 4 நபர்களுக்கு ரூ.3.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என ஆக மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான நிவாரணத்தொகைக்கானகாசோலைகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News