25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


 தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி 

38வதுதேசிய விளையாட்டு போட்டி ஜனவரி 28ந் தேதி முதல் கடந்த 14ந் தேதி வரைஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது.நாடுமுழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி யில் சர்வீசஸ் (முப்படை) 68 தங்கம், 26வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 

தமிழ்நாடு 27 தங்கம்,30 வெள்ளி,35வெண்கலம் என்று 92பதக்கங்களு டன் 6வது இடம் பெற்றது. தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதில் தடகளத்தில் 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கம்,வாள்வீச்சில் 4 தங்கம்,ஒரு வெள்ளி, வெண்கலம் என6 பதக்கம், நீச்சலில் 3 தங்கம்,10 வெள்ளி,6 வெண்கலம் என 19பதக்கம் வென்றதும் அடங்கும்.இந்த நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News