அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலையம்பட்டி B.P.V.சாலா மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் .
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலையம்பட்டி B.P.V.சாலா மேல்நிலைப்பள்ளியில் (15.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் பொது மக்களை நேரடியாக சென்று அவர்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று அமர்ந்து அவர்களுக்கான உதவியை, சேவைகளை செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுத்திக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மிகச் சிறந்த மருத்துவர்கள் இங்கு வருகை தந்து இருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 13 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 14 ஆவது முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகள், அறிவுரைகள் அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலே அளிக்கப்பட்டு வருகிறது.அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் சுமார் ரூபாய் 37 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்பட்டுள்ளன.அதில் தகுதியான அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாலையம்பட்டி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடைய உள்ளன.
இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply