25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 'சாம்பியன்’ பட்டம் வென்றார். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 'சாம்பியன்’ பட்டம் வென்றார். 

ரோம் நகரில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகதரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் 31 வயது உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார். ஸ்விடோலினா 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விடோலினாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன், ரூ.11% கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற்றகோகோ காப்புக்கு ரூ.6% கோடி கிட்டியது.

வெற்றிக்கு பிறகு 'இங்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றேன். இது அடுத்து நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும்' என்று ஸ்விடோலினா கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News