விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும், ‘தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007’-ன் (The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள முதியோர் இல்லங்கள் உடனடியாகத் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. முதியோர் இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முகவரி
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.
தொலைபேசி எண்: 04562-252701
0
Leave a Reply