25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட அனைத்துச் சேவைகளையும் மனுதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, எளிய முறையில் இலவசமாகச் செய்துகொள்ளத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பித் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News