25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


கமல் ஹாசன் தயாரிக்கும் “அமரன் “ படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கமல் ஹாசன் தயாரிக்கும் “அமரன் “ படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் 

ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக  இணைந்துள்ள  சிவகார்த்திகேயன்திரைப்படம் எஸ்.கே23. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வெளிவந்த ஏழுகடல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ருக்மிணி தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி.இப்படத்திற்குபின் இவர் ரஜினியைவைத்து இயக்க போகிறார்என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியிருக்க மீண்டும் சிவகார்த்திகேயனைவைத்து இயக்கப்போகிறாராம் சிபி. அதற்கானவேலைகள் தற்போது நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News