சையது மோடி பாட்மின்டன்: ஹரிஹரன் – அர்ஜுன் ஜோடி வெற்றி.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் ஹரிஹரன் – அர்ஜுன் ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற இத்தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் ஹரிஹரன் அம்சகருணன் – அர்ஜுன் ஜோடி, இந்தியாவின் அபினாஷ் – ஆயுஷ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய ஹரிஹரன் – அர்ஜுன் ஜோடி 21-13 என வெற்றி பெற்றது. இரண்டாவது செட்டில் 21-23 என தோல்வியைச் சந்தித்தாலும், தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 21-9 என அபாரமாக வெற்றி பெற்றது.
இதன் மூலம் 21-13, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply