தாய்லாந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை..
ஆசிய கோப்பை உலக ரேங்கிங் ,தாய்லாந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை தொடர். நேற்று கடைசி நாளில் தனிநபர் பிரிவு நடந்தன. போட்டிகள் உலக
பெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, சிங்கப்பூரின் நுார் அலிம் மோதினர். சரிதா 143–142 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், 143-141எனஇந்தோனேஷியாவின் சுவாகு மிலாங்கை வென்று தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
பெண்களுக்கான ரிசர்வ் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா ஜத்யன், 0-6 என செக் குடியரசின் ஜீவா லாவ்ரின்ச்சிடம் தோற்க வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இத்தொடரில் இந்தியா, 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் வென்றது.
0
Leave a Reply