25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி அம்மன். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி அம்மன். 

கைலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தது. இதை பார்க்க தேவர்களும், முனிவர்களும் கூடியதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. பூமியை சமப்படுத்த அகத்திய முனிவரை தெற்கு நோக்கி அனுப்பினார் சிவன்.

அப்போது, 'குற்றாலத்தில் என்னை வழிபடு.உனக்குதிருமணக்கோலத்தில் தரிசனம் தருகிறேன்' என வரம் அளித்தார். அதன்படி அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டார். குழல்வாய் மொழி நாயகி, பராசக்தி அம்மன் இங்கு அருள்புரிகின்றனர்.

சிவனின் பஞ்ச சபைகளில் சித்திரசபையாகவும், அம்மனின் சக்தி பீடங்களில் தரணி பீடமாகவும் இத்தலம் உள்ளது. பவுர்ணமி அன்று நவசக்தி பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமையில் பராசக்தி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும்.ஆடியில் நடக்கும் பத்ரதீப விழாவில் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு அபிஷேகம் நடக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News