பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க ....
எந்த கிழங்கை வேக வைத்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.
சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம்: ஏற்படாமல் நீங்கும்.
பருப்பு பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் சிறிது கொள்ளுப் பயரையும் சேர்த்து கொண்டால் பொடி மிகவும் சுவையாக இருக்கும் இது வாயுப் பிரச்சனையை தீர்ப்பதோடு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க வெறும் வாணலியில் நெய் சேர்த்து வறுத்தால் ஐவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
குருமா, தேங்காய்ச் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்
குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும்.குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
0
Leave a Reply