25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ராஜபாளையத்தில் ரயில்வே பீடர் ரோடு, மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் விபத்து அச்சத்தில்மாணவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் ரயில்வே பீடர் ரோடு, மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் விபத்து அச்சத்தில்மாணவர்கள்.

ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் மேல்நிலைப் பள்ளிகள்,  ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்து முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும்.

 ராஜபாளையம்நகர் பகுதி ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டே ஷன் செல்வதற்கு ரயில்வேபீடர் ரோடு அமைந்துள்ளது. அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் 24 மணிநேரமும் ரயில்கள் வந்து சென்று பயணிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

புது பஸ் ஸ்டாண்ட் செல்வதை எதிர்க்க பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள்இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உபயோகிக்கும் இச்சாலையில் உள்ள சீரற்ற மேடு பள்ளங்கள் ஆபத்தை விளைவிப்பது டன், வேக கட்டுப்பாடு குறியீடுகள், பாதசாரிகள் நடைமேடை, எச்சரிக்கை பலகைகள் என எதுவும் செயல்பாடு இல்லை.முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி ரோடுகளை மேம்படுத்திபாதுகாப்பு குறியீடுகள் அமைத்து வேகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவிபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News