("பூலோகக் கைலாசம்') காசியைப் பற்றி பொதுவான செய்திகள்.
காசி மாநகரம் வட இந்தியாவில் திரிவேணிசங்கமம் அமைந்திருக்கும் பிரயாக்ராஜிலிருந்து (அலகாபாத்)120 கி.மீ. தொலைவில் உள்ளது. காசி என்னும் சொல்லுக்கு "ஒளிமயமானது' என்று பொருள். இவ்வூருக்கு "வாரணாசி' என்று மற்றொரு பெயரும் உள்ளது. காசி நகருக்கு வடக்கே வாராணா என்ற நதியும் தெற்கே அசி எனும் நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்த நகரமாதலால் "வாரணாசி' என்று பெயர் அமைந்தது. இதனைப் "பூலோகக் கைலாசம்' என்றும் அழைப்பர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விசேஷங்களும் ஒருங்கே அமையப் பெற்றது காசி என்னும் புண்ணிய ஷேத்ரம். மூர்த்தி விசேஷம் பற்றி முதலில் காண்போம். மூர்த்தி: பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் முதலாவதாகக் கூறுவது காசி விஸ்வேஸ்வரர் எனும் விஸ்வநாதர் ஆகும். காசி விஸ்வநாதரை யாராக இருந்தாலும் அருகில் சென்று கைகளால் ஸ்பரிசித்து வணங்கும் பேற்றினைப் பெறலாம்.
விஸ்வநாதர் எளிமையின் வடிவம் . அவரது திருவருள் சிறப்புமிகு குணம் ஆகும். காசியில் உள்ள விஸ்வநாதரைத் தொடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதாலோ என்னவோ "காசியில் வாழும் மனிதர்களைத் தொட்டாலே பிறவித் துன்பம் கிடையாது' என்று கூறுகிறது காசிக் காண்டம்.
0
Leave a Reply