25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


திருவில்லிபுத்தூர் தொழிற்சாலைகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் தொழிற்சாலைகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத்தேர்தல்-2026 அமைதியாகவும், நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவுடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு:

இதன் ஒரு பகுதியாக,  (09.04.2026) விருதுநகர் மாவட்டம், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லி ஊராட்சியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிறப்பு தேர்தல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

 இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நேர்மையான வாக்கு - உறுதிமொழி:

இந்நிகழ்வில், பணத்திற்காகவோ அல்லது பிற தூண்டுதல்களுக்காகவோ வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக என் வாக்கு விற்பனைக்கு அன்று" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட உறுதிமொழியினை பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஏற்றுக் கொண்டனர்:

 "இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்."

 மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு:

மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொடர் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் விடுமுறையைப் பயன்படுத்தி, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என இவ்விழாவின் வாயிலாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News