25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியா, இலங்கை யில் 10வது டி-20 உலக கோப்பை லீக்  கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, இலங்கை யில் 10வது டி-20 உலக கோப்பை லீக்  கிரிக்கெட் போட்டி .

கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ‘நடப்புசாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள்  மோதின. 

'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, 'பவுலிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது. 

பாகிஸ்தான் அணி, 18 ஓவரில் 114  ரன்னுக்கு தோல்வி அடைந்தது. 

ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார். 

'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

நேபாள அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது, 

வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் வென்றார். 

ஏற்கனவே ஸ்காட்லாந்து, இங்கிலாந்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ்,வெற்றியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது.

3ல் வரிசையாக தோற்ற நேபாள அணி, அடுத்தசுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில்  சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த அமெரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது.  

நமீபிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

ஆட்ட நாயகன் விருதை அமெரிக்காவின் சஞ்சய் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News