பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடருக்கான 19வது சீசன்.
வரும் மார்ச் 28ல் ,பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடருக்கான 19வது சீசன்துவங்கி ,பைனல் மே 31ல் நடக்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட அட்டவணை வெளியானது. சட்ட மன்ற தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்க இருப்பதால், 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது.
பெங்களூருவில் வரும் மார்ச் 28ல் நடக்கும் முதல் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை சந்திக்கிறது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை (மார்ச் 30, இடம்: கவுகாத்தி அசாம்) எதிர்கொள்கிறது. சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் ஏப்.3ல் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு, சென்னை அணிகள் ஏப்.5ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் விளையாடு கின்றன. சென்னை அணி, டில்லியை ,ஏப்.11ல் சென்னையில் நடக்கும் போட்டியில் சந்திக்கிறது.
0
Leave a Reply