25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


208-திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

208-திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேர்மையான மற்றும் கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்களர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:

          அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், என் வாக்கு விற்பனைக்கு அன்று என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.

துண்டு பிரசுர விழிப்புணர்வு:

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் உள்ள வாரச்சந்தையில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News