அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிய 30 இந்தியர்கள் கைது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிக ரீதியான லாரி ஓட்டுநர் பணியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் சுமார் 30 இந்தியர்கள் அந்நாட்டு குடிவரவுத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கக் கொள்கைகளின்படி, தகுந்த பணி அனுமதி( Work பெர்மிட் ) மற்றும் குடியுரிமை' ஆவணங்கள் இன்றி இத்தகைய பணிகளில் ஈடுபடுவது தீவிர சட்ட மீறலாகக் கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீதான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் நாடு கடத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
0
Leave a Reply