'டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா' பட்டியலில் 9 விளையாட்டு நட்சத்திரங்கள்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள 'டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா' பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 விளையாட்டு நட்சத்திரங்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறமை கொண்ட 100 பேரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த 9 இந்தியர்கள் 5 பிரிவுகளின் கீழ் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
அதிசயத் திறனாளிகள் பிரிவில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா (29), நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ் (20), தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் (28) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் பிரிவில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த கோல் கீப்பரான சவிதா புனியா (36) இடம்பிடித்துள்ளார்.
0
Leave a Reply