25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.03.2026 அன்று நடைபெறவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.03.2026 அன்று நடைபெறவுள்ளது .

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் திருவிழா 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபம், அல்லம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகரில் வைத்து காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 வரை நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் துறை நிறுவனங்கள் இளைஞர்களை நேர்முகத்தேர்வு செய்து வேலை வாய்ப்பை வழங்கிடவும், தீன் தயாள்  உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களை பயிற்சிக்கு தேர்வு செய்திடவும் உள்ளனர்.

இம்மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ / டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி பயின்ற 40 வயதுக்குள்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை உள்;ளிட்ட இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புக்களை பெறவும், இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை படித்த 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்று, குடும்ப அட்டை இதர ஆவனங்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியை பெற்று பயனடையுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம், தரை தளம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் அனுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News