25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  KRP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  KRP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத்தேர்தல்-2026 அமைதியாகவும், நேர்மையாகவும், கண்ணியத்துடனும், 100 சதவீதம் வாக்குப்பதிவுடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) விருதுநகர் மாவட்டம், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, வெம்பக்கோட்டை வட்டம், எதிர்க்கோட்டை ஊராட்சியில் உள்ள  KRP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  இதில் நூற்றுக்கணக்கான மாணவ/மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 நேர்மையான வாக்கு - உறுதிமொழி:

 "இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." என்ற உறுதிமொழியினை மாணவ/மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு:

 மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொடர் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி பேருந்துகளில் என் வாக்கு, என் குரல் என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுச்சீட்டு (Stickers) பொருத்தப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News