25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.04.2026) மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு. அரவிந்த் மீனா, I AS., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு. ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 128 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 08 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 09 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 17 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 13 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 31 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

  குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News