25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே  நடைபெற்ற வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே  நடைபெற்ற வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (25.11.2026) வழங்கினார்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் 2027 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் (Special Summary Revision -SSR 2027) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இளம் தலைமுறையினரிடையே தேர்தல் விழிப்புணர்வு, ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவ/மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் கட்டுரைப் போட்டியில் 64 மாணவர்களும், வினாடி வினாப் போட்டியில் 71 மாணவர்களும் என மொத்தம் 135 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வினாடிவினா தகுதி சுற்றில் 71 மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 15 மாணவ/மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேரிடையாக வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. வினாடி-வினா மற்றும் கட்டுரைப்போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி வெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், இதர மாணவ/மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.கட்டுரைப் போட்டியில் மாணவர்களின் எழுத்துத் திறன், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையிலும், வினாடி வினாப் போட்டியில் தேர்தல் தொடர்பான அறிவு மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் மாணவர்களின் பங்கேற்பு மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரியதர்ஷினி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News