ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – இந்திய பெண்கள் அணி 5வது வெற்றி.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பெண்களுக்கான 9வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, சீனா, மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
முதல் 4 போட்டிகளில் மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, சீனா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால் ரெம்சியாமி முதல் கோலை அடித்தார்.
இதன் மூலம் தொடரில் பங்கேற்ற 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் - சீனா அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply