25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.02.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026  பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S ., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல்' படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த விதம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு குறித்து கேட்டறிந்தார்.மேலும், அதிகபட்சமாக பெயர் சேர்க்கப்பட்ட, நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுச் சாவடிகள், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்களின் தரம், வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் உதவி மையம் பற்றியும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வாக்காளர் பதிவு அலுவர்களுக்கு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News