25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி  நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில்  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 10.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர்களுக்கான
தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியில் குழுவாக அதிகபட்சம் மூன்று நபர்கள் பங்கு பெறலாம். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாக ரூ.10,000- மூன்றாம் பரிசாக ரூ.7000- வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 96988-10699 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News