25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண் விரல் பதிவு செய்யலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண் விரல் பதிவு செய்யலாம்.

மாவட்டத்தில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின் விவரங்களை ரேஷன் கார்டுடன் ஆதார் எண்விரல் ரேகை பதிவு செய்வது 83 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விடுபட்ட வர்கள் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் விரல் ரேகை பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் முன்னுரிமை குடும்ப அட்டை (பி.எச்.எச்) அந்தி யோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) அட்டைகளுக்கு குடும்ப அதிக பட்சமாக 35 கிலோ வரைஇலவச அரிசியும், மானிய  விலையில் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பலர் முறைகேடாக பெறுவதால் அரிசி வீணாவதாக கருதிய மத்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளை மார்ச் 31 வரை காலக்கெடு விதித்து கட்டாயம் ஆக்கியது

மாவட் டத்தில் 7,43,724 முன்னு ரிமை ரேஷன் கார்டுகளில் 6,13,684 கார்டுகளிலும் அந்தியோதயா கார்டு களில் 1,37,066 என ஒட்டு மொத்தமாக 83 சதவீதம்விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்துஅதிகாரிகள் தெரிவித்ததாவது: விடுபட்ட கார்டுதாரர்களில் இறந்த உறுப்பினர்களை இறப்புச் சான்றிதழ் இன்றி பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை. இதற்கு தீர்வாக அந்தந்த ரேஷன் கடை ஊழியர் களின் அறிக்கை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டுள்ளோம்.வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், பணிபுரிப வர்கள் ஏப்.15க்குள் அருகி லுள்ள ரேஷன் கடைகளில் சென்று ஆதார் அட்டைகள் மூலம் விரல் ரேகையை பதிவு செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News