மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பு வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற 21-40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியக்கூடாது. விண்ணப்பதாரர் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம் (பி.எம்.எப்.எம்.இ), வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் (ஏ.ஐ.எப்.) கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்கலாம்.
வங்கிக் கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் ஜூன் 30.06.2024 மாலை 6.00 மணிக்குள் தங்கள் பகுதிக்குரிய வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு கள ஆய்விற்கு பின், வங்கிக்கடன் அடிப்படையில் மானியமாக ரூ.1 இலட்சம் விடுவிக்கப்படும். வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி குறித்து கூடுதல் விவரங்களுக்கு பெற https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply