தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் 32.81 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட குப்பைகளை 450 கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பு தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 32.813 மெட்ரிக் டன் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
11 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலைகள் மற்றும் பொது இடங்களில் குவிந்த குப்பை கழிவுகள், தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு மற்றும் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 கிராம ஊராட்சிகளில் 3.696 மெட்ரிக் டன், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46 கிராம ஊராட்சிகளில் 2.339 மெட்ரிக் டன், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 54 கிராம ஊராட்சிகளில் 6.154 மெட்ரிக் டன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் 1.911 மெட்ரிக் டன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 48 கிராம ஊராட்சிகளில் 2.627 மெட்ரிக் டன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 கிராம ஊராட்சிகளில் 1.250 மெட்ரிக் டன்,
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 58 கிராம ஊராட்சிகளில் 5.033 மெட்ரிக் டன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம ஊராட்சிகளில் 3.218 மெட்ரிக் டன், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 கிராம ஊராட்சிகளில் 2.384 மெட்ரிக் டன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் 2.274 மெட்ரிக் டன் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் 1.927 மெட்ரிக் டன் ஆக மொத்தம் 32.813 மெட்ரிக் டன் குப்பைகள் கிராம ஊராட்சி பகுதிகளில் அகற்றப்பட்டது.
உலர்கழிவு 11.749 மெட்ரிக் டன், ஈரக்கழிவு 3.539 மெட்ரிக் டன், பட்டாசுக் கழிவுகள் 17.525 மெட்ரிக் டன் ஆக மொத்தம் 32.813 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும். குளங்கள், ஊரணிகள், கண்மாய்களில் குப்பைகளை கொட்டாமல் தங்கள் இல்லங்களுக்கு நாள்தோறும் வரும் தூய்மை காவலர்களிடம்
மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள்,
சுகாதார கழிவுகள்(சானிடரி நாப்கின்கள், டயப்பர்கள், துணிகள் மற்றும் சுகாதார ரீதியாக பயன்படுத்தப்பட்ட இதர பொருட்கள்), சிறப்பு அல்லது அபாயகராமான கழிவுகள் (மருத்துவ கழிவுகள், பயன்படுத்திய பேட்டரிகள், மின்னனு பொருட்கள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆபத்தான பொருட்கள்)
என நான்கு வகையாக குப்பைகளை தரம்பிரித்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply