சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (07.01.2026) தொடங்கி வைத்தார்.எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது விருதுநகர் மாவட்டத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களால் கடந்த 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சரிபார்க்கும் பணியானது நேற்றுடன்(06.01.2026) முடிவடைந்தது. இதனையடுத்து, சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் 1 சதவீத இயந்திரங்களில் தலா 1200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 1000 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.எந்தெந்த இயந்திரங்களில் இந்த மாதிரி வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளே இயந்திரங்களைத் தேர்வு செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு இன்று(07.01.2025) காலை 9.30 மணிக்குத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது நாளை(08.01.2026) வரை நடைபெறும்.
மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் எதிர்வரும் தேர்தலில் பயன்படுத்துவதற்கென பாதுகாப்பறையில் வைத்து சீலிடப்படும். இவ்வாறு சரிபார்த்து பாதுகாப்பில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். சரிபார்க்கும் பணியின் போது பழுதடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் பெங்க;ருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
0
Leave a Reply