விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சி, சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சி, சமத்துவபுரத்தில் (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நம்முடைய சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மிகச்சிறப்பான வகையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பொங்கல் விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கலாக கொண்டாட ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் மிகச் சிறப்பான முறையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த பொங்கல் சமத்துவப் பொங்கல் என்றழைக்கப்பட ஒரே காரணம் இந்தியாவின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அந்தந்த நிலப்பகுதியையோ, அவர்கள் சார்ந்துள்ள சமுதாய மரபினை சார்ந்தோ அவர்களின் பாரம்பரிய மரபு படி ஒவ்வொரு பண்டிகையினையும் கொண்டாடுவது இயற்கை.
தமிழ்நாட்டிலும் அது போன்றே. ஆனால், சாதி,மத,இன,பொருளாதார ரீதியில் எந்த வித பாகுபாடும் இல்லாமல், எந்த வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நாம் அனைவரும் தமிழர் நாம் அனைவரும் பேசக் கூடிய மொழி தொன்மையான தமிழ் மொழி. இது தமிழர் திருநாள்.உழவர் திருநாள். எனவே, இது தான் சமத்துவப் பொங்கல் நடைபெறக் கூடிய நாளாக இருக்கும். இது தான் உண்மையான சமத்துவ நாளாக இருக்கும் என்கிற வகையில் அமையப் பெற்றுள்ளது.இந்த பொங்கல் விழாவினை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவர்.பைசாகி என்று வட இந்தியாவில் கொண்டாடுவர். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டிலே இத்திருநாளை சூரியன் போக்கினை வைத்து, உழவர்களுக்கான அறுவடைத்திருநாளாக கொண்டாடுகிறோம்.
பொருளாதாரத்திலே 11.6 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்கினை அடைந்துள்ளோம் . இவ்வளர்ச்சியானது சமுதாயத்திலே உள்ள அடித்தட்டு மக்களின் வளர்ச்சியினையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது சமூக நலத்திட்டங்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லா விதத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.இந்த ஆண்டின் துவக்கத்தில் 1 கோடியே 13 இலட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீட்டிக்கப்பட்டு 1 கோடியே 33 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் முதல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா விதமானத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
இந்த தைத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமையும் வகையில் என் இனிய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் 450-கிராம ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆணையிட்டதைத் தொடர்ந்து, சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6 இலட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.181 கோடி வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை ஈ.வெ.ரா.பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply