திரீசா, காயத்ரி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில், 17 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அர்ஜுனா விருதுக்கு தேர்வானவர்களில் தடகள வீரர்கள் தேஜஸ்வின் ஷங்கர், பிரியங்கா, முகமது அஜ்மல், திவ்யா, விதித் சந்தோஷ் சேத்ரி, பாட்மின்டன் வீராங்கனைகள் திரீசா, காயத்ரி, குத்துச்சண்டை வீரர் நரேந்தர், ஹாக்கி வீரர்கள் ராஜ்குமார் பால், லால்ரெம்சியாமி, கபடி வீரர்கள் சுர்ஜீத், பூஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படகு வலித்தல் வீரர் அர்விந்த் சிங், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அகில் ஷியோரன், பாரா தடகள வீராங்கனை ஏக்தா பயான், காது கேளாதோர் துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த், பாரா துப்பாக்கிச் சுடுதல் வீரர் ருத்ராங்க்ஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது முன்னாள் கால்பந்து வீரர் அருமைநாயகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
துரோணாச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குத்துச்சண்டை பயிற்சியாளர் தர்மேந்திர யாதவ், மல்யுத்த பயிற்சியாளர் விரேந்தர் குமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருதுக்கு பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ் மற்றும் நேஹா சவான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0
Leave a Reply