25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 04.00 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப்பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.தடைசெய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்லக்கூடாது.

 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ)/ மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News